அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

strike-angry-people-employees-going-33594175பட்டுக்கோட்டை: புதிய ஓய்வூதிய திட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இரண்டாவது நாளான நேற்று பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊரியர் சங்க பட்டுக்கோட்டை வட்டத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஞானசூரியன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சிவரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை சந்திரமோகன், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டத் தலைவர் ராஜேந்திரன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் வீராச்சாமி, செயலாளர் ஜீவா, அங்கன்வாடி சங்க வட்டத்தலைவர் வசந்தா, மருந்தாளுர் சங்கம் ரவிச்சந்திரன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள அனைத்து துறைகளை சேர்ந்த 500 பெண்கள் உள்பட 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, நாளை (இன்று) தஞ்சையில் சுமார் 12,000 அரசு ஊழியர்கள் சாலை மறியல் செய்து சிறை நிரப்பவுள்ளோம் என்றார்.

நன்றி:தினகரன்

Close