அவதிப்படும் காதிர் முஹைதீன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

12722156_754475684689153_772388940_nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளிக்கு செல்லும் ஏரிப்புறக்கரை சாலை முதல் இராஜா மடம் சாலை வழியாக கீழத்தோட்டம் செல்லும் தார் சாலையை ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மேம்படுத்தும் பணிக்காக ரூபாய் 57.18 ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்க்கான பணிகள் துவங்கப்பட்டன.

இந்நிலையில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளிக்கு செல்லும் சாலையின் முகப்பில் சில மீட்டர்கள் பெயர்க்கப்பட்டு புதிய சாலை அமைப்பதற்க்காக கறிங்கற்க்கள் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் பரத்தப்பட்டன. ஆனால் இன்றளவும் இதன் மீது தார் சாலை அமைக்கப்படாததால் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இதனை கடந்து செல்வதற்க்கு சிரமப்படுகின்றனர். சில மாணவர்கள் இதன் மீது சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து காயங்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close