அதிரையில் பரபரப்பு! பேருராட்சி அலுவலகத்தில் தமுமுக வினர் உள்ளிருப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)

12714413_754465301356858_451251666_nஅதிரை பேரூராட்சி மன்றத்தின் இறுதி கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு துவங்கி நடைபெறுவதாக இருந்தது. வழக்கம் போல் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் அதிரையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4 பெண் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் புறக்கணித்ததை கண்டித்து அந்த இரண்டு பெண் கவுன்சிலர்களும், ம.ம.க வினரும் கூட்டம் நடக்க கூடாது எனவும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் அறிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முகாமிட்டனர்.

இதனால் பேரூராட்சி மன்ற கூட்டம் தடைபட்டது. சேர்மன் அஸ்லம் இதனை மீறி கூட்டத்தை நடத்த முனைப்பு காட்டியதால் தமுமுகவினர் மற்றும் பேரூராட்சி தலைவர் அஸ்லம் தரப்பினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு காவல் துறையினர் தலையிட்டு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் இன்னும் தமுமுக, மமக வினர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்ரிப் தொழுகை நடத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு இணைந்திருங்கள் உங்கள் அதிரை பிறையில்…

Close