அதிரையில் 5 மணி நேரம் நீடித்த 4 பெண் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்! (வீடியோ இணைப்பு)

12733413_949005505182088_737260144804894313_n

அதிரை பேரூராட்சி மன்றத்தின் இறுதி கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு துவங்கி நடைபெறுவதாக இருந்தது. வழக்கம் போல் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் அதிரையில்  10,11,17,19 ஆகிய வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4 பெண் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் புறக்கணித்ததை கண்டித்து அந்த இரண்டு பெண் கவுன்சிலர்களும், ம.ம.க வினரும் கூட்டம் நடக்க கூடாது எனவும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் அறிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முகாமிட்டனர்.

இதனால் பேரூராட்சி மன்ற கூட்டம் தடைபட்டது. சேர்மன் அஸ்லம் இதனை மீறி கூட்டத்தை நடத்த முனைப்பு காட்டியதால் தமுமுகவினர் மற்றும் பேரூராட்சி தலைவர் அஸ்லம் தரப்பினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு காவல் துறையினர் தலையிட்டு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் இன்னும் தமுமுக, மமக வினர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்ரிப், இஷா தொழுகைகளை பேரூராட்சி அலுவலகத்திலேயே நடத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்தை தஞ்சை தெற்கு மாவட்ட ம.ம.க தலைவர் மதுக்கூர்.கஃப்பார் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். இது குறித்து சம்பந்த அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்திற்கு வந்து பிரச்சனை கேட்டு அறியும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டம் துவங்க 5 மணி நேரம் கழித்து பட்டுக்கோட்டை தாசில்தார் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து 9:30 மணியளவில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.

Close