அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா!(படங்கள் இணைப்பு).

அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 42வது ஆண்டு நிறைவு விழா இன்று மாலை 4:00 மணி அளவில் புதிய பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக துவங்கியது முதலாவது நிகழ்ச்சியாக கிராத் ஒதி ஹாஜி.ஹஜரத் சேக் உமர்.ஆலிம் அவர்கள்  நிகழ்ச்சியை  ஆரம்பித்து வைத்தார்கள் பின்பு முத்த முதல்வர் ஹாஜி s.பரகத் சார்M.A.,M.ED.,M.PHIL.,PGDTE., அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார், பின்பு தலைமை உரை ஹாஜி.A.அகமது இப்ராஹிம்B.com., அவர்கள் வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஹாஜி.S.ஹாஜா முகைதின் M.B.B.S.,DCH.,FPC., அவர்கள் செற்ப்பொழிவு ஆற்றினார்கள் இவ்விழாவை மேலும் சிறப்பு அளிக்க மதிப்புக்குரிய கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி .M.B.அபூபக்கர் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் பின்னர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவபடுத்தினர்.

அதனை தொடர்ந்து பரிசு அளிப்பு விழாவும் நடைப்பெற்றது. பின்பு இறுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இவ்விழாவி பெற்றோர் கலக உற்ப்பினர்கள் பெற்றோர்கள் மாணவிகள்,மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Close