யூ ட்யூபில் பிரபலமாகிவரும் அதிரை நண்பர்களின் “முகங்கள்” குறும்படம்!

அதிரையை சேர்ந்தவர்கள் ஹிதாயத்துல்லா, ரஃபீக், ஷஃபி. தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்கள். சமுக அக்கரை கொண்ட இம்மூவரும் சமுகத்தில் புகை பழக்கத்துக்கும் போதை பழக்கத்திற்கும் அடிமையாகும் இளைஞர்களுக்காக ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கி யூ ட்யூபில் வெளியிட்டனர். இதன் பின்னர் நெற்று முன் தினம் நமது அதிரை பிறை தளத்திலும் வீடியோவுடன் பதிந்திருந்தோம்.

தற்பொழுது  யூடியூப்பில் அதிகம் பேர் இதை கண்டுகளித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம், போன்ற பல சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பேச்சும் இல்லாமல் ஒரு தனி நபரின் செயலை வைத்தே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படமாய் உருவக்கிய இவ்விளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.

இது போன்று மீடியா துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் இது போன்று தங்களுக்கு கிடைத்த நேரங்களில் சமுகம் சார்ந்த அக்கரையோடு பல செயல்கள் செய்ய வேண்டும். இது போன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் இந்த காலத்து மக்களுக்கு மேன் மேலும் தேவை என்பது காலத்தின் கட்டாயம்! அதை கருத்தில் கொண்டு இந்த இளைஞர்கள் போல் நமதூரில் பலருக்கு  வெவ்வேறு துரைகளில் நல்ல  திறமைகள் உள்ளன. அவர்களும் தங்கள் துரைகளுக்கு ஏற்றவாறு சமுகம் சார்ந்த இது போன்ற காரியங்களில் ஈடுபட முன்வர வேண்டும்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close