அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் இரத்ததான முகாம்! (படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி ஆகியவை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் அதிரை நடுத்தெருவில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் அரங்கில் இன்று 14.02.2016 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது.

இதில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் இரத்தத்தை தானமாக வழங்கி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் இரத்தகொடையாளர்களுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது. இந்த முகாம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

Close