சென்னை சில்க்ஸ் போக போறீங்களா? ஒரு நிமிஷம்!

BXbcNTzg24-chennai-silks2432-600-jpgஒருவர் சென்னை சில்க்ஸ் சென்றார். அவருக்கு பிடித்த டிரஸ் அங்கு இல்லை. ஆகவே வேறு கடைக்கு செல்ல முயன்ற அவருக்கு ஏற்பட்ட சோதனையை பாருங்கள்.
கொஞ்சம் நில்லுங்க, பர்சேஸ் ப்ரூப் எங்கே காட்டுங்க என்று சற்று அதிகாரமான குரலில் கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், சார், நாங்க வாங்கனும்னு நினைச்சு வந்த டிரஸ் கிடைக்கலே, தவிரவும் எங்களுக்கு கடையிலே உதவவும் யாரும் வரலே. அதனாலே வெளிலே வந்து வேறே பொருட்கள் வாங்கிட்டு கிளம்புறோம். பார்கிங் சார்ஜ் எதாவது வேணும்னா கூட குடுக்குறோம்னு பொறுமையா சொன்னேன்.

அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.
இது சுரீர் என்று எனக்கு கோபத்தை கூடிவிட்டது. என்னங்க இது அநியாயம். உங்க கடைக்கு ஒரு பொருள் வாங்கனும்னு வரோம். அது புடிக்கலேனா என்ன பண்றது. கார் பார்க் பண்ணினதுக்காக எதாவது வாங்கியே ஆகணுமா என்ன ?
ஆமாம் நீங்க கண்டிப்பா எதாவது வாங்கியே ஆகணும்.
சரி, நான் உங்கள் மேனேஜர் கூட பேசணும் என்றேன்.

இங்கே நான் தான் மேனேஜர், எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க.
ஒ, அப்படியா, இந்தாங்க நூறு ரூபா, இதை பார்கிங் சார்ஜா வேணும்னா வெச்சுகோங்க, இல்லேனா எதாவது பொருள் வாங்கினதா நினைச்சுங்கோங்க. பேமிலி கூட வந்து இருக்கேன், இப்படி நடு ரோட்டுலே வெச்சு பேச்சை வளர்க்க நான் விரும்பலே என்றேன்.
அதெல்லாம் முடியாது, நீங்க கடைக்குள்ளே வந்து எதாவது வாங்கியே ஆகணும்.

எனக்கு உஷ்ணம் கூடிவிட்டது. இங்கே பாருங்க, இந்த மாதிரி என்னை ஏதாவது வாங்கறதுக்கு கட்டாயபடுத்தினா, இனிமேல் இந்த கடைக்கு நான் வரமாட்டேன். அது உங்களுக்கு ஓகேன்னு நினைசீங்கனா நான் கடைக்குள்ளே வந்து எதாவது வாங்குறேன் என்றேன்.
சரி, நீங்க இனிமேல் கடைக்கு வரவேண்டாம், இப்போ உள்ளே வந்து எதாவது வாங்குங்க.

நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.
பின் குறிப்பு: இது பற்றி சென்னை சில்க்ஸ் வெப்சைட்டில் உள்ள எல்லா ஈ மெயிலுக்கும் தெரியப்படுத்தியும் எந்த பதிலும் இதுவரை இல்லை.
கலைபிரியன் ஜெகா முகநூல் பக்கத்திலிருந்து…

கடந்த தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் திருடி விட்டதாக கூறி பிடித்து புர்காவை கிழித்து அடித்து இழுத்து சென்றுள்ளனர் இதை கண்ட அப்பகுதி முஸ்லிம்கள் சென்னை சில்க்ஸ் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரும், சென்னை சிலக்ஸ் உரிமையாளரும் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களிடமும், சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

CCTVயில் சோதனையிட்டதில் முஸ்லிம் பெண் திருடவில்லை என்பது நிரூபணமானது. அதன்பின்னர் முஸ்லிம் பெண்ணிடம் எல்லை மீறிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:newstig

Close