இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம்!

trichy2தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மைசூர் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், திருச்சி 3 இடத்தில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் மைசூர் முதலிடத்தையும், ஹரியானா மாநிலம் சண்டிகர் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

4ம் இடத்தை டெல்லியும், 5ம் இடத்தை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினமும், குஜராத் மாநிலம் சூரத் 6வது இடத்தையும், ராஜ்கோட் 7வது இடத்தையும் பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலம் கேங்டாக் 8வது இடத்தையும், மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாத் 9ம் இடத்தையும், மும்பை 10ம் இடத்தையும் பிடித்துள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மையான 75 நகரங்கள் பட்டியலில் மதுரை 34வது இடத்தையும், சென்னை 36வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு திருச்சி 2வது இடத்தை பிடித்திருந்தது. இந்தாண்டு 3வது இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளது.

Close