அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர்!

dj0gcNFIsri-srinivasanஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அண்டோனின் ஸ்கேலியா உயிரிழந்ததையடுத்து, அடுத்த நீதிபதியை தேர்வு செய்ய அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது சர்க்யூட் நீதிபதியாக உள்ள ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனை உச்ச நீதிமன்ற நீதிபதி ‌பதவிக்கு ஒபாமா பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

48 வயதாகும் ஸ்ரீனிவாசனுக்கு குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளின் ஆதரவு இருப்பதால், அவருக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்ரீனிவாசனின் தாயார் சென்னையைச் சேர்ந்தவர். அவரது தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவர்கள் 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினர்.

Close