அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Daily_News_8789440393448அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் கொட்டும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அந்நாட்டின் வடக்கு கரோலினா மாகாணம் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகளில் 4 அங்குலம் அளவிற்கு பனி படர்ந்துள்ளதால் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் ஆங்காங்கே பனியில் சிக்கியுள்ளன.

அமெரிக்காவில் தற்போது விடுமுறை தினம் என்பதால் மக்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் பனியுடன் கனமழையும் பெய்து வருகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக தலைநகர் வாஷிங்டன், நியுயார்க், வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் 1400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நன்றி:தினகரன்

Close