அதிரை 11வது வார்டில் மூடப்படாத கால்வாயால் நோய் பரவும் அபாயம் !

அதிரை 11 வது வார்டு ECR சாலையில் இருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு செல்லும் சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இதனால் கால்வாயை மூடியிருந்த கற்கள் அகற்றப்பட்டு சாலையிலேயே போடப்பட்டன.

இது ஒரு புறம் இருக்க அதிரையில் பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தேங்கியுள்ளது. பொது மக்கள் ஏராளனானோர் இப்பகுதியை கடந்து செல்லும் போது முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் பாதசாரிகள் இந்த தண்ணீரை கடந்து செல்வதற்க்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கழிவு நீருடன் தேங்கி நிற்கும் மழை நீரால் இப்பகுதி மக்களுக்கும் இதனை கடந்து செல்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி இப்பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

செய்தி & புகைப்பட உதவி :
OKM.பைசல் 

Advertisement

Close