Dr.Pirai-வெள்ளை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

dr.pirai_எல்லா உணவுகளுக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு தன்மை இருக்கும். ஒவ்வொரு உணவிலும் ஏதேனும் ஒரு சத்து அதிகமாக இருக்கும். அது புரதமாக, வைட்டமினாக, நார்ச்சத்தாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனால் தான் நமது உணவு முறையில் பிடிக்கும், பிடிக்காது என பாராமல் அணைத்து காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இறைச்சிக்கு இணையான புரத சத்துக்கள் இருக்கும் சைவ காய்கறி உணவுகள்!! ஒருசில காய்கறிகள் கண்ணுக்கு நல்லதாக இருக்கும், சிலவன இதயம், கல்லீரல், செரிமானம் என கண்டிப்பாக ஏதேனும் ஓர் உடல் பாகதிற்குக் சிறந்த உணவாக இருக்கும். இந்த வகையில் வெள்ளை காய்கறி உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன, அவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என இனிக் காண்போம்…

 காலிஃபிளவர்: கல்லேரலில் இருக்கும் நச்சுக்களை போக்க உதவும் உணவுகளில் காலிஃபிளவர் ஓர் சிறந்த உணவாகும். காலிஃபிளவர் மற்றும் ப்ரோகோலி இரண்டுமே புரோஸ்டேட்புற்றுநோய் அபாயத்தை குறைக்கவல்ல காய்கறிகள்.

வெங்காயம்: நோய் எதிர்ப்பை அதிகரிக்க, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, இதய நலனை அதிகரிக்க, நச்சுக்களை போக்க என பல வகைகளில் உடலுக்கு நன்மை விளைவிக்கிறது வெங்காயம்.

பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும், மேல் தோல் மட்டும் நீக்குவது போதுமானது, சிலர் வெங்காயத்தை அரைவாசி வரையிலும் உரித்து எடுத்துவிடுவார்கள். இதை தவிர்க்கவும்.

தேங்காய் பால், எண்ணெய்: வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணை குணப்படுத்த தேங்காய் பால் மற்றும் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்தல் சிறந்தது.

பூண்டு: பூண்டு ஓர் மருத்துவ குணம் வாய்ந்த உணவு. உணவு என்பதை விட பூண்டு மருந்து என்பது தான் சிறந்தது. இது, கொலஸ்ட்ரால் குறைக்க, நச்சுக்களை போக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க, இதய நலனை காக்க என பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. பூண்டில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மிகவும் சக்தி வாய்ந்தது.

டர்னிப்: டர்னிப்பில் நார்ச்சத்து அதிகம். இதை சூப், சாம்பார், பொரியல் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். இது ஒருவகையான கிழங்கு வகை காய்கறி ஆகும். நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

Close