அதிரையில் அதிகாரிகளின் மெத்தன போக்கால் சீர் குலைந்த சாலைகள்!

3
இரு மாதத்திற்கு முன் நமதூர் பேருந்து நிலையம் முதல் மேலத்தெரு வரையிலான சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணி துவங்கியது. இதனால் பல வணிக ஷதாபனங்களின் படிகள், கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அரை குறை யாக இடித்ததுடன் மேலும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கபடாமல் வேலைகளை பாதியில் நிறுத்தி இருப்பது ஒரு சிலரை குறிவைத்து நடத்த பட்ட ஏற்பாடாக இருக்கும் என்கின்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்ளது.

இப்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு சில கடைகளில்  முன்பிருந்தது போல் கடைகளை விரிவாக்கம் செய்துள்ளனர் . அரசு அதிகாரிகளின் பயனற்ற வேலையினால் யாருக்கும் எந்த பலனும் அளிக்க வில்லை என்பதே எதார்த்தமான உண்மை.

Close