அதிரையில் முரட்டு பைக்குகளில் மிரட்டும் சத்ததுடன் விரட்டும் இளைஞர்கள்!

2010-Royal-Enfield-Bullet-Classic-C5-15
தற்போது அதிரையர்கள் மத்தியில் ராயல் ஏன்ஃபீல்டு, புல்லட் பைக்குகள், சூப்பர் பைக்குகள் மீதான மோகம் அதிகரித்துள்ளதை சாலைகளில் காணமுடிகின்றது. சுமார் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான இந்த பைக்குகளை அதிரையர்கள் அதிக அளவில் வாங்கி ஓட்டுகின்றனர். இதில் பெரும்பாலான பைக்குளில் அதிக சத்தம் தரும் சைலசர்களை பொருத்தி ஓட்டுகின்றனர்.

இதன் காரணமாக இவர்கள் சாலையில் அதிவேகத்தில் செல்லும்போது நான்கு தெருக்களுக்கு இந்த பைக் செல்லும் சத்தம் கேட்கின்றது. இது போன்ற பைக்குகளில் செல்லும்போது பெரும்பாலான முதியவர்கள், பெண்கள், இதயநோயாளிகள் காதை அடைத்துக்கொள்கின்றனர்.

அந்த அளவுக்கு இந்த பைக்குகள் அவர்கள் மனதில் அமைதியின்மையையும் ஒருவித படபடப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது. சில இளைஞர்கள் பெண்கள் பள்ளி விடும் நேரங்களில் அந்த பள்ளி வழியாக அதிவேகத்தில் பயங்கர சத்தத்துடன் இந்த பைக்கை ஓட்டி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவிகளில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிறரை துண்புருத்தும் எந்தவொரு காரியமும் செயக்கூடாது என நமது நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

ஆனால் வெறும் பந்தா பெருமைக்காக இது போன்ற அதிக சத்தம் தரும் பைக்குகளை ஓட்டி செல்வதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர் எனபதே உண்மை. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற சைலன்சர்களை அகற்றி சத்தம் குறைவாக தரும் சைலன்சர்களை நாம் பொருத்தி பிறருக்கு துன்பம் தராத பாதுகாப்பான பயணத்தை உங்கள் இருசக்கர வாகனங்களில் மேற்கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close