அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் கண் பரிசோதனை முகாம்!

12742670_727195364084226_2851082431140253260_n

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இலவச கண்பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு வரும் 25/02/2015 அன்று காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை அதிரை சேதுரோடு சாரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் வருகை தந்து கண்புரை, சர்க்கரை நோய், குழந்தைகளுக்கான கண்நோய் ஆகிவற்றுக்கு இலவசமாக பரிசோதித்து சிகிச்சையளிக்க உள்ளனர். மேலும் இம்முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மலிவு விலையில் கண்ணாடிகளும் விற்பனை செய்யப்படவுள்ளனர்.

குறிப்பு: இதில் கண்புரை ஆறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து செலவுகளும் இலவசமாக செய்யப்படும்.

எனவே இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Close