அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியா???

30TH_JAYA-MODI_1923432fபாஜகவுடன் கூட்டணி சேர அதிமுக தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிகள் கூட்டணியை ஏற்படுத்த முந்தியடித்துக்கொண்டுள்ளன.

மக்கள் நல கூட்டணியில் நான்கு கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரசும், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது.

மற்ற பெரிய கட்சிகள் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில், விஜயகாந்த்தை உள்ளடக்கிய வேறு ஒரு கூட்டணியும் அமையும் என்று ஒரு தகவல் நிலவியது.

இருப்பினும், அதிமுகவோடு கூட்டணி வைக்க பாஜகவில் பல தலைவர்கள் விரும்புவதால், அக்கட்சியோடு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. அதிமுக அல்லது திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி வைத்தால்தான் தமிழக சட்டசபையில் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது பாஜக தலைவர்கள் ஆவல்.

காங்கிரசோடு, திமுக கூட்டணி வைத்துவிட்டதால், இப்போது எஞ்சியிருப்பது அதிமுக மற்றும் விஜயகாந்த் கட்சிகளுடனான கூட்டணிதான். இதில் அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்திக்க பாஜக பகீரத முயற்சி எடுத்து வருகிறது.

முதலில் ஜெயலலிதா தரப்பில் பாஜகவோடு கூட்டணி அமைக்க பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால், எதிரே கூட்டணிகள் வலுவாகி வருவதால், பாஜக வாக்கு வங்கியை தன்பக்கம் இழுக்கும் நோக்கில், அதிமுக தலைமையும், கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக 100 இடங்களை கேட்டதாகவும், அதிமுக கூட்டணியில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதால் தற்போது 25 சீட்டுகள் கேட்பதாகவும், இதற்கு ஜெயலலிதா பச்சை கொடி காட்டிவிட்டதாகவும், நியூஸ் எக்ஸ் ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி: oneindia.com

Close