எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் முஸ்லிம் உதவி ஆய்வாளர் நியமனம் !


எஸ்.பி. காவல்நிலையத்தில் பணி புரிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் செய்யது முஹம்மது என்ற வாலிபரை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்து, கொலையை மறைப்பதற்கு மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

அதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களும், நியாயவான்களும் கடும் கண்டன குரல்களை எழுப்பினர்.

ஒரு வாரம் தமிழகத்தை பரபரப்பாக வைத்திருந்த எஸ்.பி.பட்டிணம் சம்பவத்தை தமிழகத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் விவாத பொருளாக ஆக்கினர். அனைத்து தொலைக்காட்சியிலும் எஸ்.பி. பட்டிணம் விவாதமே சூடு பறந்தது.

அனைத்து தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்து கொண்ட தமுமுக உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் இயக்க தலைவர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொண்ட SP பட்டிணம் காவல்நிலையத்தில் ஒரு முஸ்லிம் காவலர் கூட இல்லை என்பதை சுட்டிக் காட்டினர்.

இந்நிலையில் எஸ்.பி.பட்டிணம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாள

ராக முஸ்தபா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் . 

Advertisement

Close