Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

hd-wallpaper-kids-cut-picturesதமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.21) நடைபெறவுள்ளது.

 முதற்கட்டமாக ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற சொட்டு மருந்து முகாமின் மூலம் 67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

 தமிழகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் தவணையாக வரும் ஞாயிற்றுக்கிழமை சொட்டு மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.