அதிரை அரசு மருத்துவமனையில் துவங்கிய 680 சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

mmதமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் 68வது பிறந்தநால் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும், 680 சிறப்பு மருத்துவமுகாமும் நடத்தப்படுகின்றது. அந்தவகையில் அதிரை அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சிகள் துவங்கின. இந்த முகாமில் 680 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்ததில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை மருத்துவர் சீனிவாசன், மருத்துவர் ஹாஜா முகைதீன் மற்றும் அதிமுக நகர நிர்வாகிகள் நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிரை அதிமுக நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம், வார்டு கவுன்சிலர்கள் ஹாஜா முஹைதீன், சிவக்குமார், உதயகுமார், நகர பாசரை தலைவர் அஹமது தாஹிர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு துவங்கி வைத்தனர்.

Close