முஸ்லீம் என்றால் பாகிஸ்தான் தானா ? OLX இன் அற்ப புத்தி!

olxமுஸ்லீம் மதத்தை சேர்ந்த இந்திய தொழில்முனைவோரை பாகிஸ்தான்காரர் என்று குறிப்பிட்ட ஓஎல்எக்ஸ் (OLX) இணையதளத்தால் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த மோஹ்சின் கான் என்ற தொழில்முனைவோர், ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் கட்டண முறையில் விளம்பரம் செய்வதற்காக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தொடர்புக்கொண்டுள்ளார். அதில், யாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓஎல்எக்ஸ், தங்கள் நிறுவனத்தின் கட்டண விளம்பர சேவை பாகிஸ்தானில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு கோபமடைந்த மோஹ்சின் கான், தான் பாகிஸ்தான் இல்லை என்றும், இந்தியா என்றும் தெரிவித்தார். இந்த உரையாடல் பதிவு, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தன்னை ஓஎல்எக்ஸ் நிறுவனம் தொடர்புக்கொண்டு பேசியதாகவும் PACKS என்று ஆங்கிலத்தில் இருந்தது பாகிஸ்தான் என்று தவறாக புரிந்துக்கொண்டதாக தெரிவித்ததாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்ததாகவும், மோஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் கான் கேட்டுக்கொண்டார்.

Close