அதிரை அரசு மருத்துவமனையில் யூனானி மருத்துவர் ஷீரின் நியமனம்! (வீடியோ இணைப்பு)

Publication1அதிரை அரசு மருத்துவமனையில் யூனானி மருத்துவ சிகிச்சை தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக நமதூரில் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காக இன்று யூனானி மருத்துவர் டாக்டர் ஷீரின் அவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டார். இதில் அனைத்து வகையான நோய்களுக்கும் யூனானி சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்கபடவுள்ளது.

மேலும் நமதூர் அரசு மருத்துவமனையில் இரத்த சேமிப்பு மையமும் விரைவில் நிறுவப்படவுள்ளது. இது குறித்து அதிமுக நகர செயலாளர் பிச்சை நமது அதிரை பிறைக்கு அளித்த பிரத்யேக பேட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Close