வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புது ஐடி கார்டு!

Daily_News_2090374231339துபாய்: துபாய் இந்திய தூதரக அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வெளிநாடுகளில் நீண்ட காலம் வசிக்கும் இந்தியருக்கு இந்திய வம்சாவளி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது அது வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பெயரில் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் மார்ச் 31க்கு பிறகு பழைய அடையாள அட்டை செல்லாது. புதிய அட்டை பெற இந்திய தூதரகத்தில் விண்ணப்பி்க்கலாம். இதற்கு 2 மாதமாகும் என்பதால், கடைசி நேரத்தில் நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நன்றி:தினகரன்

Close