இன்னும் மூன்றே வருஷத்துலே 5G தொழில்நுட்பம் வரப் போகுது!

25011_540இந்தியாவில் 3G மற்றும் 4G தலைமுறை இணைய வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 13 சதவீத மொபைல் சந்தாதாரர்களே அவற்றை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் உலக அளவில் 3G, 4G மொபைல் டேட்டாக்களின் கட்டணங்கள் குறைவாக இருப்பது இந்தியாவில் தான் என்பது நினைவுகூறத்தக்கது.மொத்தத்தில் தற்போது, 4ஜி என அழைக்கப்படும் 4ஆவது தலைமுறை இணை யம், உலகில் முழுமையாக பரவல் செய்யப்படாமல் உள்ளது. இதனிடையே , சீனா, தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள், 5 ஆவது தலைமுறை இணையத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

தற்போதைய் 4G நெட்வொர்க்கில் ஒரு படத்தை டவுண்லோடு செய்ய ஏறத்தாழ 8 நிமிடங்கள் வரை ஆகிறது. விரைவில் 5 நொடிகளில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளில் படத்தை அதிவேகமாக டவுண்லோடு செய்யும் அளவிற்கு 5G நெட்வொர்க்கை உருவாக்குவதில் லண்டன் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அங்குள்ள சர்ரே பல்கலைக்கழகம் 2011 பிற்பாதியில் இருந்தே இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு சாம்சங், புஜித்சு உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களும் ஆதரவளித்து வருகின்றன. 5G அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக சர்ரே பல்கலைக்கழக வளாகத்தில் 2 சதுர மைல் பரப்பளவில் 70-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ரேடியோ ஆண்டனாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள 5G ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பலன்களையும், முடிவுகளையும் வரும் திங்கட்கிழமை முதல் பார்சிலோனாவில் நடக்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் காட்சிப்படுத்தப் பட உள்ளது. குறிப்பாக, ஜப்பானை சேர்ந்த டொகோமோ, ATT மற்றும் NTT, சுவீடனை சேர்ந்த எரிக்சன், சீனாவின் ஹூவேய் ஆகிய நிறுவனங்கள் 5G நெட்வொர்க்கில் முன்னிலையில் இருக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. அனைத்து டிஜிட்டல் கருவிகளிலும் இயங்கும் வகையிலான 5G அதிவேக இண்டர்நெட் வரும் 2018-க்குள் பரவலாக அறிமுகமாகும் என சர்ரே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ஆனா நம்ம இந்தியாவிலதை உபயோகப்படுத்த முப்பது வருடம் கூட ஆகலாம்.

Close