அதிரை இளைஞர் ஜாபிர் மாநில அளவிலான கிராஅத் போட்டியில் 5ஆம் இடம்!


சென்னையில் அமைந்துள்ள க்ரெசெண்ட் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் யுனிவர்சிடியும் , இஸ்லாமிய கலாச்சார பேரவையும் இணைந்து மாநில அளவிலான கிராஅத் போட்டியை நடத்தின. இப்போட்டியில் பல ஊர்களை சேர்ந்த திறமையான ஹாஃபிழ்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சேஹன்னா ஆலிம் அவர்களின் மகன் ஜாபிர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக இனிய குரலில் கிராஅத் ஓதி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதில் இவர் 5வது இடத்தை பெற்றார். மேலும் இவருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி இவர் இதற்கு முன் அதிரையிலும், பிற ஊர்களிலும் நடந்த கிராஅத் போட்டிகளிலும் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Close