வினோதமான காந்த மனிதன்!

ORcjOKS9magnaticவினோதமான காந்த மனிதன்!

மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ” காந்த மனிதன் ” என்று அழைக்கப்படுகிறார் . அதற்கு காரணம் , உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால் , இவருக்கு இப்பெயர் உருவானது .

2 கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக பிரித்து , கிட்டத்தட்ட 36 கிலோ வரை , எவ்விதமான பசையும் பயன்படுத்தாமல் , தன் உடலில் ஒட்ட வைத்துள்ள இவர் , டிஸ்கவரி சேனலில் வரும் ஒன் ஸ்டெப் பியான்ட் என்ற நிகழ்ச்சியிலும் , தனது முழு திறனையும் வெளிப்படுத்தி , உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார் .

இவர் உடலை ஆராய்ந்த விஞ்ஜானிகள் , ” இவருடைய தோலில் உள்ள அதிகப்படியான உராய்வினால் ஏற்படும் உறிஞ்சும் தன்மையால் இவ்வாறு , இவரால் உலோகங்களை ஒட்ட வைக்க முடிகிறது ” என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர் .

Close