அதிரையில் தமுமுக வினர் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

  

கடந்த அக்டோபர் 6 அன்று ம.ம.க மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், அன்றைய கட்சி பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களுக்கும் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனை அடுத்து தமீம் அன்சாரி தலைமையிலானவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். 
இதனை அடுத்து கட்சி தங்களுக்கு தான் சொந்தம் என தமீம் அன்சாரி தலைமையிலான சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் மமக தங்களுக்கு சொந்தம் என தொடர்ப்பட்ட தமீம் அன்சாரி அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

   
    
   

Close