Adirai pirai
Dr.Pirai

Dr.Pirai-குடல் புண்ணை தடுப்பது எப்படி!

dr.pirai_குடல் புண் இதனை சாதாரணமாக சொல்லிவிட்டாலும், சில சமயங்களில் இதனால் ஏற்படும் வயிற்று வலியால் பலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. முறையான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதுடன், மனஅழுத்தம் ஏற்படாமல் இருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம். குடல் புண் பற்றியும் அதனை தவிர்ப்பது பற்றியும் மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்,

குடல் புண் என்பது தொண்டைக்கு கீழ் உள்ள உணவுக் குழாய், வயிறு, டியோடினம், சிறுகுடல் ஆகிய பகுதிகளில் உள்பக்கம் உள்ள தசைகளில் அரிப்பு ஏற்படுவதால் உருவாகிறது. இயல்பாக தொண்டை முதல் சிறு குடல் வரையிலான பகுதி கட்டியான வழுவழுப்பு தன்மையுடன் இருக்கும். ஆனால் குடல் புண் பாதிப்பு உள்ளவர்களிடம் இந்த வழுவழுப்பு குறைவாக இருக்கும். மேலும் செரிமானத்திற்கு பயன்தரும் அமிலத்தன்மை அதிகரித்தாலும் தசை எளிதில் அரிப்பு ஏற்பட்டு குடல் புண் ஏற்படுகிறது.

இது ஒவ்வொரு இடத்திற்கு தக்கவேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது. புண்டியோடினத்தில் இருந்தால் இதனைடியோடினல் அல்சர் எனவும், உணவுக் குழாயில் (ஈசோபேகசில்) இருந்தால் ஈசோ பேகஸ் அல்சர் என்றும், வயிற்றில் இருந்தால் கேஸ்டிரிக் அல்சர் என்றும் அழைக்கப்படுகிறது. 20 சதவீத மக்கள் குடல் புண் தொந்தரவால் அவதிப்படுகிறார்கள். 15 சதவிகிதம் பேருக்கு உள் ரத்த கசிவால் பாதிப்பு ஏற்படுகிறது. 10 சதவீதம் பேருக்கு தற்காலிகமாக குடல் புண் ஏற்படுவதும் பின் சரியாகி விடுவதுமாக உள்ளது.

அறிகுறி:

முக்கியமாக இரவு நேரங்களில் உணவு அருந்திய பின் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி. வயிற்று பெருமல், வாந்தி, ஏப்பம், பசியின்மை, ரத்த வாந்தி, உடல் நலிவு போன்ற அறிகுறிகள் காணப்படும். வயிறு எரிச்சல், காந்தல், நெஞ்சு கூட்டு பகுதியில் இருக்கும் வெறும் வயிற்றில் சற்று வலியாக இருக்கும். வலி மற்றும் காந்தலினால் உணவிற்கு மேல் வெறுப்பு ஏற்படும். உணவிற்கு பின் படிப்படியாக வலி குறையும். குடலில் உள் ரத்த கசிவால் கருநிற மலம் வெளியேறும்.

புண் இருக்கும் இடத்திற்கு தக்க அறிகுறி மாறி தெரியும். அதாவது வயிற்றிற்கு மேல் பகுதியில் உணவுக் குழாயில் வாந்தி வருவது போன்று, பசி இன்மை, வாந்தியுடன் ரத்தம் கலந்துள்ள அறிகுறிகள் தென்படும். வயிறு பகுதியில் அல்சர் இருந்தால் உணவிற்கு பின் 3 மணி நேரத்திற்கு தாங்க முடியாத வலி இருக்கும்.டியோடின பகுதியில் அல்சர் இருந்தால் 3 மணி நேரத்திற்கு பின் வலி ஏற்படும்.

காரணம் என்ன?

60 சதவீத மக்களுக்கு நுண்பாக்டீரியாவான ஹெலிக்கோபேக்டர் பைலோரை நோய் தொற்றே காரணம். பாதிக்கப்பட்டவரிடம் குடலில் பாக்டீரியா எதிர்ப்புசக்தி குறைந்து, இக்கிருமிகள் அதிகமாகி குடல் சுவர்களை அரித்துரணத்தை ஏற்படுத்தும். அதிகமாக என் எஸ் ஏ ஐ டி எஸ் வகை மருந்துகளை உட்கொள்வதால் குடலில் உள்ள வழுவழுப்பு தன்மை அதிகம் உற்பத்தி ஆகாது.

மிககுறைந்த காரணங்களான மருந்து புகையிலை, புகைபிடித்தல், மதுபானம், மனஅழுத்தம், கல்லீரல் சுருக்கம், நோய்களுக்கான ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்துவதாலும் பாதிப்பு அடைகின்றனர். மிக அரிதாக காரமான உணவு சாப்பிடுவதாலும், காப்பி, தீராத வியாதிகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிற்றுபுற்றுநோய், பித்தப்பை கல், கல்லீரல் வீக்கம், இருதய நோய், மூத்திரகல் ஆகிய பிரச்சனைகளிலும், மேற்கூறிய அறிகுறிகளான வயிற்றுவலி காணப்படும்.

நோயின் சிக்கல் எந்த பகுதியில் ரத்தம் கசிந்தாலும் உயிருக்கு ஆபத்து. குடலில் ஓட்டை விழுவதால் உணவு குடலில் இருந்து ஒழுகி அப்டாமினல்கே விற்றியில் வந்து பல நோய்களின் தாக்கத்தை உருவாக்கும். சில சமயம் அருகில் உள்ள மற்ற அவயங்களையும் துளைத்து சிக்கலை ஏற்படுத்தி குடல் சுருங்கி பித்தம் கலராத வாந்தி ஏற்படும்.

கண்டறியும் முறை:

என்டோஸ்கோபிக், எக்ஸ்ரே அல்லது மலப்பரிசோதனை மூலம் அறியலாம். என்டோஸ்கோபிக் பயாப்சி, எஸ்சோபாகோகே ஸ்ட்ரோடி யோட் என்டோஸ்கோப்பிக் டெஸ்ட்நோய் தொற்றின் ஆதிக்கத்தையும், விபரங்களையும் கண்டறியும் நவீன முறையாகும்.

அறுவை இல்லா சிகிச்சை:

அமிலத்தன்மையை குறைப்பதற்கான மருந்துகள் தரப்படுகிறது. ஹெச் பி லாரய் நுண் கிருமி ஆன்டிபயடிக் மருந்துகள் மூலம் குறைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை:

குடலில் ரத்தகசிவு இருந்தால் ரத்தம் ஏற்றவேண்டும். அறுவை சிகிச்சை மூலம் ரத்த கசிவை நிறுத்தலாம். சில நேரங்களில் அழுகிய தசையை அகற்றி வேறு தசையை பொருத்தலாம்.

ஆயுர்வேத சிகிச்சை:

திராட்சை, வில்வம், ஏலம், அக்கினி மந்தை, குமிழ், பேய் புளி, பாடை கிழங்கு, கண்டங்கத்திரி, சுண்டைக்காய், மணத்தக்காளி, சுக்கு, நெருஞ்சி, சீந்தில், வேம்பு, வெந்தயம், குகுலு, தண்ணீர் விட்டான் கிழங்கு, திரிபலா, கொத்தமல்லி, புளியாரை, மாதுளை, தசமூலம், புங்கு, கொழிஞ்சி, கோரை, அதிமதுரம், நன்னாரி, தேன், நெய் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மருந்துடன், பிராணயாமம், அக்கு பஞ்சர், இசை சிகிச்சை ஆகியன சிறந்த பலனை தருகிறது.

கடை பிடிக்க வேண்டியவை:

புகை பிடித்தல், காரம், கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும். சீரான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். வலி நிவாரணி, இரும்புசத்து மருந்து, பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் கோபம் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும்.

வீட்டு வைத்தியம்:

ஐந்து ஏலக்காயை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு பருக வேண்டும்.

வெந்தய இலையை கொதிக்க வைத்த நீரை பருகலாம். கோஸ் அல்லது வெண்டைக்காய் சாற்றை குடிக்க வேண்டும்.

உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிடலாம். தேன் நெய் சமஅளவு எடுத்து வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணை 2 டீஸ்பூன் சாப்பிடலாம். அரிசி வடித்த தண்ணீர் பருகலாம்.