52 தலைமுறைகளை கடந்தும் கம்பீரமாக நிற்கும் உலகின் பழமையான ஹொட்டல்!

XSrts586oldest_hotel_002

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹொட்டல் ஒன்று 1300 ஆண்டுகள் கழித்தும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானியின் எல்லைக்குட்ட யமனஷி பகுதியில் அமைந்துள்ளது நிஷியாமா ஒன்சென் கீயன்கன் (Nishiyama Onsen Keiunkan) ஹொட்டல்.

சுமார் 1311 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 705 ஆம் ஆண்டில் ஃபுஜிவாரா மஹிட்டோ என்பவரால் இந்த ஹொட்டல் கட்டப்பட்டது.

உலகின் பழமையான ஹொட்டலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த ஹொட்டலில் மாமன்னர்கள், சாமுராய்கள் மற்றும் ராஜ பரம்பரையை சேர்ந்த பலர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1300 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னும் இந்த ஹொட்டல் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

இயற்கையாக அமைந்துள்ள வெந்நீர் ஊற்று மற்றும் புகழ்பெற்ற மவுண்ட் ஃபுஜி அருகில் அமைந்துள்ளது போன்றவை இதற்கு முக்கிய காரணமாக விளங்கிவருகிறது

மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, சுற்றிலும் இயற்கையின் அழகிய காட்சிகள் ஆகியவை இதனை தனித்தன்மையுடன் திகழ் செய்கிறது.

இந்த ஹொட்டலில் மொத்தம் 35 அறைகள் உள்ளன. 52 தலைமுறைகளை சேர்ந்தவர்கள் இந்த ஹொட்டலை நிர்வகித்துள்ளனர்.

இந்த ஹொட்டலுக்கு வருபவர்கள் அணிந்துகொள்வதற்காக பாரம்பரிய ஆடைகள் வழங்கப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் தங்களின் காலணிகளை ஹொட்டலுக்கு வெளியே விட்டுவிட வேண்டும்.

பாரம்பரிய இந்த ஹொட்டலில் வைஃபை போன்ற வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹொட்டல் அவ்வப்போது சில மாற்றங்களை சந்தித்துள்ளது. எனினும் தனது பழமையை இழக்காமல் இன்றும் கம்பீரமாகவே உள்ளது என்பது ஆச்சரியம் தான்.

Close