அதிரை அருகே பிரில்லியன்ட் CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா (படங்கள் இணைப்பு)

12799317_730648857072210_5133436092404063302_nஅதிரை அருகே உள்ளூர் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது பிரில்லியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி. இப்பள்ளியில் அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மூத்த நிர்வாகிகள், சிறப்பு விருந்தினராக காதிர் முஹைதீன் கல்லூரியின் பேராசிரியர் செய்யது அகமது கபீர், அதிரை காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் தலைமையாசிரியர் ஹாஜா முஹைதீன் அவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமயமான கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர். இதில் பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

படங்கள்: பேரா.செய்யது அஹமது கபீர்

Close