தமீம் அன்சாரியின் புதிய மனிதநேய ஜனநாயக கட்சி இன்று துவங்கப்பட்டது! (படங்கள் இணைப்பு)

12803137_903544866429538_401019900587770548_nமனிதநேய மக்கள் கட்சியின் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு தமீம் அன்சாரியின் தரப்பில் தொடக்கப்பட்டது.

அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று (28.02.2016) கும்பகோணத்தில் எங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் ‘புதிய பாதை- புதிய பயணம்’ என்ற முழக்கத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சி‬ என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி, கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

வரும் சட்டமன்ற தேர்தலில் கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Close