கேரளாவில் மாநிலத்திலேயே மிக நீளமான விமான நிலையம் என்ற பெயருடன் உருவான விமான நிலையம் திறப்பு!

Daily_News_4649469256402திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணூரில் மாநிலத்திலேயே மிக நீளமான விமான நிலையம் என்ற பெயருடன் உருவான விமான நிலையம் இன்று முதலமைச்சர் உம்மன்சாண்டி முன்னிலையில் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக பெங்களூருவில் இருந்து 10 பயணிகளுடன் வந்த விமானம் இன்று காலை இந்த புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

இந்த விமான நிலையம் 2200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் ஓடுதளம் 4 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்டது. முதற்கட்டமாக 3050 மீட்டர் ஓடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள ஓடுதளம் தயாராகி வருகிறது. இந்த பணியும் முடிந்து விட்டால் இங்கு வர்த்தக விமானங்கள் தரை இறங்கும். இதன் மூலம் கேரள மாநிலத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Close