பூடானில் உலக சாதனை படைத்த அதிரை முத்துப்பேட்டை மாணவர்கள்! (படங்கள் இணைப்பு)

  
அதிரை புதுமனைத்தெருவைச் சேர்ந்த K.M. முஹம்மத் முஹைத்தீன் அவர்களின் மகன் ஆகிப் அஹமத் (வயது 17). இவர் திருச்சி MAM பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்திய கைப்பந்து அணியில் விளையாட பூட்டான் நாட்டிற்கு சென்றுள்ளார். அதுபோன்று அதே பள்ளியில் பயிலும் முத்துப்பேட்டையை சேர்ந்த சல்மான் பார்ஷி என்ற மாணவரும் இந்த அணியில் இடம்பெற்றார்.  இப்போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி பூட்டான் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது ப்

இதில் சிறப்பாக செயல்பட்ட அதிரை இளம் வீரரான ஆகிப் அஹம்த் அவருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

  

Close