10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை!

nokia-1110_1310 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை:

* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோன்களைSMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம்.

* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளைபடங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம்.

* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை
ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம்.

* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள்.

* பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களைரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.

* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்துவேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம்.

* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போகவேண்டியிருந்தது.

* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனைஅட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம்.

* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது,ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது,டாப்-அப் கிடையாது.

* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்துமொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாகஅனுப்பினோம்.

* அடிக்கடி பேட்டரியை கழட்டியதுகிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது.

* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும்குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட்பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர்போடப்பட்டிருந்தது.

* Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறுசட்டைப்பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.

* பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால்மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.

* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாகசெல்போன் வைத்திருந்தார்கள்.

* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின்செல்போனை தொடவே பயந்தார்கள்.

* மிஸ்டு கால் என்றால் என்னவென்றேதெரியாமல் இருந்தோம்.

* மழையில் நனைந்த செல்போனை மொட்டைமாடியில் காய வைத்து நமக்கு நாமேசரிசெய்து கொண்டோம்.

* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்குஎப்படி போன் செய்வதென்று தெரியாமல்படித்தவர்களிடம்கேட்டோம்.

* Snake Xania மற்றும் Carrom Boardகேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம்.

* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரேசெல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல்வைத்திருந்தோம்.

வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.

ஆனால் இன்று?

Close