சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு! சென்னை அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு !

மீனம்பாக்கம், சென்னையில் இருந்து
துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
விமானம் இன்று அதிகாலை 3.15 மணிக்கு
புறப்பட வேண்டும். இதில் பயணம் செய்ய
இருந்த 248 பயணிகள், நள்ளிரவு 12
மணிக்கெல்லாம் விமான நிலையத்துக்கு வந்து விட்டனர். அவர்கள், சுங்க
சோதனை, குடியுரிமை சோதனை,
பாதுகாப்பு சோதனை அனைத்தையும்
முடித்து விட்டு விமானத்தில் ஏற
தயாராக இருந்தனர். இந்த விமானம்
துபாயில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் புறப்படும். அதிகாலை 2
மணிக்கு விமானம் வந்து விட்டது.
அப்போது, ‘இயந்திர கோளாறு
ஏற்பட்டது. சரி செய்தால்தான் இயக்க
முடியும்’ என்று விமானி கூறிவிட்டார்.
உடனே ‘விமானத்தில் சிறிய இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது, சரி
செய்துவிட்டு அதிகாலை 5 மணிக்கு
புறப்படும்’ என அதிகாரிகள்
பயணிகளுக்கு அறிவித்தனர். 5
மணியானபோது, ‘7 மணிக்கு புறப்படும்’
என்றும் அதற்கு பிறகு, ‘9 மணிக்கு புறப்படும்’ என்றும் மாறி மாறி
அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம்
அடைந்த பயணிகள், போராட்டம் நடத்த
தொடங்கினோம். பின்னர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு,
‘நள்ளிரவு முதலே காத்திருக்கிறோம், நேரமாகும் என தெரிந்தால் ஓட்டலில் தங்க
வைத்திருக்கலாமே, இப்படி
அலைகழிப்பதா’ என்று அதிகாரிகளிடம்
பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.
‘விமானத்தின் பழுது சிறிது நேரத்தில்
சரி செய்யப்பட்டு விடும்’ என கூறி சமாதானப்படுத்தி காலை சிற்றுண்டி
வழங்கினர். இதையடுத்து பழுது சரி
செய்யப்பட்டு காலை 11.30 மணிக்கு
விமானம் புறப்பட்டது. இதனால் பயணிகள்
கடும் அவதிக்குள்ளானார்கள்.

IMG_1496.JPG

Close