பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடங்குகிறது!அதிரை மாணவ-மாணவிகள் தயார் நிலையில்!!

  

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி வரையும் நடைப்பெறுகிறது.

இதில் தமிழகம்-புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6ஆயிரத்து 550 பள்ளிகளில் இருத்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

பள்ளி மாணவர்களை தவிர தனி தேர்வாளர்கள் 42,347 பேர் எழுத உள்ளனர்.
அந்த வகையில் நம்தூர் காதிர் மொய்தீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் அதிரை மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராக உள்ளனர்.
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை என தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
மாணவ மாணவிகள் தேர்வில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளாமல் தேர்வை முறையாக எழுதும் படி

 அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!

Close