பட்டுக்கோட்டையில் நகை கடைகள் அடைப்பு! உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

kalalநகை இறக்குமதிக்கு, 10 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 18 ஆயிரம் ரூபாய் கோடி முதல், 20 ஆயிரம் ரூபாய் கோடி வரை மத்திய அரசுக்கு வரி கிடைக்கிறது. ஆனால் இந்த கலால் வரியை மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் உயர்த்துவதை கண்டித்து நாடு முழுவதும் நகைகடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து நகைகடைகளும் உரிமையாளர்களால் அடைக்கப்பட்டு நகர தங்கம், வெள்ளி, நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் பொற்கொள்ளர் சங்கம் சார்பாக பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அவர்கள் மத்திய அரசின் இந்த முடிவை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

1 2 3நேரடி தகவல்: இஜாஸ் (அதிரை பிறை)

Close