ஆப்பிள் iPhone 5S 12,000 ரூபாயாக குறைப்பு!

maxresdefault (1)ஸ்மார்ட்ஃபோன் வகைகளில் ஆண்டிராய்டு இயங்குதள செல்பேசிகள் அதிகம் பேர் பயன்படுத்தினாலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பிரியர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

வரும் மார்ச் 22ந்தேதி ஐபோன் எஸ்ஈ (iPhone SE) பதிப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, ஐபோன் 5எஸ் பதிப்பின் விலை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 5எஸ் விலை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விலை குறைப்பு செய்யப்படுவதால், தற்போதைய விலையான ரூ. 21,000 என்பதில் இருந்து ரூ. 12,000 ஆக குறைய வாய்ப்பிருக்கிறது.

அதிக விலை காரணமாக ஐபோன் பயனாளர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. இந்நிலையில், இந்த விலை குறைப்பு இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Close