சவூதி அரேபியாவில் வாழும் ஏழைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 56 ஆயிரம் வீடுகள்!

12321416_600935986732222_4997112224784511343_nமனித வாழ்க்கைக்கு வீடு மிகவும் அவசியமாகும். சவூதி அரேபியாவில் வாழும் குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மன்னர் சல்மான் பல்வேறு திட்டங்களை வகுத்து அதன்படி செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒருகட்டமாக குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காக 56 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசத்தை போன்று இந்த வீடுகள் அல்ல,

ஏனென்றால் சவூதி அரேபியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியல்ல, இறப்பு வரை இருக்கும் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது.

ஆகையால் அரசின் சார்பில் வழங்கப்படும் இவ்வீடுகள் மக்களை கவருவதற்காக அல்ல, மாறாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்

Close