வாக்குச்சாவடியில் என்னென்ன வசதிகள்!

Daily_News_6483532190323வாக்காளர்கள் எந்தவித இடையூறுமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் பல்வேறு வசதிகள் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் தெரிவித்தார்.

* வாக்குச்சாவடிகளில் குடிநீர், கூரை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகள் நடந்தோ, சக்கர நாற்காலியிலோ வந்து வாக்களிக்க வசதியாக சாய்வுப்பாதை அமைக்கப்படும். அவர்களுக்கான மூன்று சக்கர வாகனங்களை நிறுத்த உரிய இட வசதி செய்து தர வேண்டும்.
* வாக்குப்பதிவு மையங்கள் கட்டாயம் தரை தளத்தில்தான் அமைக்க வேண்டும்.
* ஒவ்வொரு தொகுதியிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
* ஒரு ஊரில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டால் அங்கு ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என தனித்தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். பெண்கள் ஆண்களுடன் ஒரே மையத்தில் வாக்களிக்க தயங்கும் இடங்களிலும் பெண்களுக்கு தனிச் சாவடி அமைக்க வேண்டும்.
* பார்வையற்றவர்கள் வாக்களிக்க வசதியாக பார்வையற்றவர்களுக்கான பள்ளிகளிலும், தொழுநோயாளிகளுக்கு எலும்புருக்கி நோய்க்கான மருத்துவமனைகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் நடவடிக்கைகள், அலுவலர்களின் நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

நோட்டாவுக்கு சின்னம்

எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர்களும் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் இளஞ்சிவப்பு நிற பொத்தான் இருக்கும். இது வேட்பாளர்களின் பெயர்களுக்கு கீழ் கடைசியில் இடம் பெற்று இருக்கும். இனி மேலே உள்ள யாருக்கும்( நன் ஆஃப் தி அபவ் – என்ஓடிஏ) எனும் வாக்களிக்க விரும்வில்லை எனும் நோட்டாவுக்கும் இப்போது சின்னம் அறிமுகமாகிறது.

வேட்பாளர் படத்துடன்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்களுடன் அவர்களின் புகைப்படங்களும் இடம் பெறும். இது ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் இந்த படம் வைக்கும் முறை வாக்காளர்களை எளிதாக வேட்பாளர்களை தெரிவு செய்து வாக்களிக்க வசதியாக இருக்கும்.

முறைகேடுகள் கண்டுபிடிக்க வாகனங்களில் ஜிபிஎஸ்

முறைகேடுகள் குறித்து புகார்களை பெறும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்கிறாரா என்பதை கண்காணிக்க அவர்களின் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்படும். அதனை தேர்தல் அதிகாரி அலுவலகம் கண்காணிக்கும்.

வாட்ஸ்ஆப் மூலம் புகார் தரலாம்

அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் தங்கள் புகார்களை, குறைகளை, பார்க்கும் முறைகேடுகளை புகைப்படமாகவும், வீடியோகவும் வாட்ஸ்ஆப் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பலாம். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஏடிஆர் ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.
* அரசியல்கட்சிகள், வேட்பாளர்கள் கூட்டங்கள், ஊர்வலங்கள், வாகனங்கள் பயன்படுத்த, தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க, ஒலிபெருக்கி பயன்படுத்த தேவையான அனுமதியை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

கட்டணமில்லா போன் 1950

புகார்கள், குறைகள், முறைகேடுகள் குறித்து தெரிவிக்க கட்டணமில்லா உதவி அமைய அழைப்பு எண்ணான 1950 பயன்பாட்டில் உள்ளது. இந்த தேர்தலில் கூடுதலாக இணையம் அடிப்படையிலான உதவி மையம் அமைக்கப்படும். அதற்கு தேர்தல் அலுவலக இணையதளங்கள் பயன்படுத்தலாம்.

Close