சவூதி அரேபியாவில் பிரம்மாண்டமான மலர் மற்றும் தோட்ட கண்காட்சி தொடக்கம்

Daily_News_4485241174698மலர் என்றாலே மனம் மயங்குவது இயற்கை அதிலும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அழகு மலர்கள் காட்சிதருவது குளிர் பிரேதசத்த்தில் அல்ல பாலைவனமும்,பெட்ரோல் வளமும் நிறைந்த சவூதி அரேபியாவில்தான். சவூதி அரேபியாவின் யன்பு நகரில் 10வது மலர் மற்றும் தோட்ட திருவிழா தொடங்கியது. இக்கண்காட்சியில் வண்ணமயமான லட்சக்கணக்கான பூக்கள் மக்களை கவர்ந்து வருகிறது. 

இவ்விழாவில்150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்று  வீட்டு தோட்டங்கள் பராமரிப்பு, நவீன பாசன, விவசாய கருவிகள், நாற்றங்கால் பொருட்கள், தோட்டத்தில் மரச்சாமான்கள், உரங்கள் மற்றும் விதைகள் நிறுவது தொடர்பான விளக்கம் என தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். 17நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்டு களிப்பார்கள். கடந்த காலங்களில் உலகின் மிகபெரிய‌  மலர்களான விரிப்பு இங்கு அமைக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

Close