Dr.Pirai-குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம் !

dr.pirai_சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சைவாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்றுவாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ளகுடல் புண்களை ஆற்றும் தன்மையுடையதுஎன்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும்அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர்ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்துவிடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லியசவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்துபுண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சைவாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லிகஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரைசாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போதுஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்குமுன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ்எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது.முடிந்தவரை காரத்தைக் குறைத்துச்
சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச்சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச்சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு
வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்குசிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர்,இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில்சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக்கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவுகொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும்.பற்களின் எனாமல் சிதையாமல்பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச்சோப்புத் துண்டை அதில் குழப்பினால்சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல்கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ்வெளியேறி விடும்

Close