அதிரையரை அசர வைக்கும் 3 ரூபாய் தோசை, 2 ரூபாய் இட்லி!

img_3812 

அதிரை வண்டிபேட்டை, மதுக்கூர் ரோட்டில் அமைந்துள்ள இந்த கடைக்கென்று போர்டுகூட கிடையாது. வீட்டையே ஹோட்டலாக வயதான இருவரே அக்கடையை நடத்துகிறார்கள். உண்ண வருபவர்களை சொந்தகாரர்களைபோல கனிவாக உபசரிப்பதே மிக அழகு.

கிராமத்து சுவையில்

இட்லி – 2 ரூபாய்

தோசை – 3 ரூபாய்

கெட்டியான சட்னி, சாம்பார், பொடியோடு மிக சுவையாக சாப்பிட சிறந்த இடம். மிக மிக குறைந்த விலையில் மிக சுத்தமான கிராமத்து சுவையோடு கிடைப்பதே இக்காலத்தில் அரிதான விஷயம். ஒருமுறை சென்று சாப்பிட்டுதான் பாருங்களேன்.

-அதிரை உபயா

Close