பலரது உயிரைக் காப்பாற்றியவர் செய்யது முகம்மது !

ராமநாதபுரம்: காவல்துறை அதிகாரியால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகம்மது.
எரிந்து கொண்டிருந்த பேருந்தில் உயிருக்காகப் போராடியவர்கள் பலரை காப்பாற்றியவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கடந்த 14ஆம் தேதி அழைத்து செல்லப்பட்ட செய்யது முஹம்மது என்ற இளைஞர் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துணை ஆய்வாளர் காளிதாஸால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தை உலுக்கிய இந்த ‘காவல் நிலைய மரணம்’ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கொடுஞ் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர் குறித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் எஸ்.பி.பட்டினம் மக்கள் நினைவு கூறுகின்றனர். கடந்தமாதம், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட அன்று, பயணிகளுடன் ஏர்வாடிக்குச் சென்றுகொண்டிருந்த காரைக்குடி டெப்போ பேருந்து, எஸ்.பி.பட்டினத்தில் திடீரென தீப்பிடித்து நிற்க… அந்தத் தீயை அணைத்து, மொத்தப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர், இறந்துபோன இளைஞன் சையது முகமது.
அவர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த அநியாய மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Close