அதிரையில் துவங்கியது வடகிழக்கு பருவ மழை!

அதிரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. வருடா வருடம் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 20 ம் தேதி அன்று துவங்கும். கடந்த 6 வருடங்களாக காலம் தாழ்த்தி பெய்து வருகிறது. ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்க்கு மாறாக 2 நாட்களுக்கு முன்னதாக நேற்றே வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளாதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நமதூர் அதிரையிலும் கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

Advertisement

Close