ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுறிய அருமையான வாய்ப்பு!

airindia1ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணியாற்ற அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். மொத்தம் 137 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை நிரப்ப ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக ஏப்ரல் 4 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. வேலையில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். வாடிக்கையாளர் முகவர் அல்லது பாதுகாப்பு முகவர் (Customer Agent or Security Agent) என்ற இந்தப் பணியிடத்தில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறனும் மற்றும் உள்ளூர் மற்றும் ஹிந்தி மொழிகளின் அறிவு பெற்றிருப்பது அவசியமாகும். மார்ச் 1-ம் தேதியின்படி வயதுவயரம்பு 28-க்குள் இருத்தல் அவசியம். இந்தப் பணியிடத்துக்கு ஊதியமாக ரூ.14,180 வழங்கப்படும். இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். இந்தத் தொகையை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Air India Air Transport Services Ltd என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்பவேண்டும். Air India Staff Housing Old Colony Ground, Kalina, Santa Cruz (E), Mumbai 400 029 என்ற முகவரியில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு ஏப்ரல் 4-ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

Close