தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

14-1457947353-7-atm-600வரும் 24ம் தேதி துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம் எந்திரங்களில் பணம் தீர்ந்து போகக்கூடும். வரும் 24ம் தேதி துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை. மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை காரணமாக விடுமுறை, 25ம் தேதி புனித வெள்ளி விடுமுறை, 26ம் தேதி நான்காவது சனி என்பதால் விடுமுறை, 27ம் தேதி ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது

அரசு வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாமல் இருந்தால் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும். அதிலும் முக்கியமான பெரும்பாலான ஏடிஎம் எந்திரங்களில் பணம் இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் போதிய பணத்தை நிரப்ப வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்கள் வங்கி விடுமுறை வருகிறது என்ற செய்தியை படித்துவிட்டு சும்மா இல்லாமல் வீட்டிற்கு தேவையான பணத்தை ஏடிஎம் மையத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

Close