அதிரையில் தீபாவளியை முன்னிட்டு அணிவகுத்த பட்டாசு கடைகள் (படங்கள் இணைப்பு)


எதிர்வரும் 22ம் தேதி
நாடு முழுவதும் இந்து மத சகோதரர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, நல்ல உணவு பலகாரங்கள் செய்து உண்டு உறவினர்கள், மற்றும் மாற்று மத நண்பர்களுடன் பகிர்ந்து வீட்டில்
உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரவர்களுக்கு ஏற்றவாறு பட்டாசுகளை வெடித்து
தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்துவர்.
அந்த வகையில் வரும்
தீபாவளிக்கு தேவையான வெடிகளை அதிரை பெரிய கடைத்தெரு, பேருந்து நிலையம் அருகில்,
ஈ.சி.ஆர் சாலை, பழஞ்செட்டித் தெரு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில்
விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் சிறுவர்கள் வெடிக்கும் கம்பி மத்தாப்பு
முதல் ராக்கெட் வெடிகள் வரை அனைத்து விதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனை ஏராளமான
சிறுவர்கள், இந்து மத சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

பட்டாசுகளை
பாதுகாப்புடன் கையாளவும்! சிறுவர்கள் பெரியவர்கள் துணையுடன் பட்டாசுகளை வெடிக்கவும்!
தீபாவளியை பாதுக்காப்பான தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்க்கு அதிரை பிறை
சார்பாக அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close