அதிரையில் அசத்தும் பட்டங்களும்! அச்சுறுத்தும் மாஞ்சா கயிறும்! 

  
 அதிரையில் கடந்த ஒரு மாத காலமாக காத்தாடி சீசன் களைகட்டியுள்ளது. வயது வித்தியாசமின்றி பெரியவர், சிறிவர்கள், இளைஞர்கள் என பலரும் சேர்ந்துக்கொண்டு மாலை நேரங்களில் வீட்டு மாடிகளில் வண்ண வண்ண பட்டங்களை விட்டு மகிழ்கின்றனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், இந்த பட்டங்களை விடுவதற்கான அதிக விலை கொடுத்து மாஞ்சா நூல்களை பயன்படுத்துகின்றனர். 

img_4219இந்த மாஞ்சா நூல் குறித்து நாம் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டும் என்பதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு மின்சார கம்பியில் சுற்றிக்கொண்டிருந்த இந்த மாஞ்சா நூல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த ஒருவரின் கழுத்தை அறுத்து அவர் பறிதாபமாக உயிரிழந்தார். இது போன்று பல மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து இந்த மாஞ்சா நூல்களை தடை செய்தது அரசாங்கம். 

  ஆனால் தடையை மீறி பல இடங்களில் இந்த மாஞ்சா நூல் விற்பனை செய்யப்பட்டு அதை இளைஞர்களும் சிறுவர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது, இளைஞர்கள் இதனால் வரக்கூடிய ஆபத்துக்களை சிந்தித்து தங்கள் விளையாட்டு பிறருக்கு விணையாக அமையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சிறுவர்களுக்கு பெற்றோர்கள் இது போன்ற ஆபத்தான மாஞ்சா நூலை வாங்கிருவதை நிறுத்த வேண்டும். 

  அதிரையில் சில சாலைகளில் அறுந்த மாஞ்சா கயிறுகள் பட்டங்களுடனும் தனியாக தொங்கிக்கொண்டிருந்தன. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று எச்சரியுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

    
    
 
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Close