அதிரையில் நடைபெற்ற TNTJ 2வது கிளையின் ஆலோசனைக் கூட்டம்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 ஆலோசனை கூட்டம் இன்று அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை துனை தலைவர் தீனுல் ஹக் தலைமையில் தாயி பயிற்சி மாணவர் முகம்மதுவின் பயானுடன் துவங்கியது அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அழைப்பு பணியால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

17-3-2016 வியாழக்கிழமை மாலை 6.30 மாநில தணிக்கை குழு தலைவர் M S செய்யது இப்ராகிமை வைத்து அயிஷா மகளீர் அரங்கில் பொய்யான ஆண்மிகமும் போலி ஷேகுமார்கள் என்ற தலைப்பில் சிறப்பாக கூட்டம் நடத்துவது

இந்த கருத்தரங்கத்தை ஆட்டோ மற்றும் பிட்நோட்டீஸ் மூலமாக மக்களிடம் விளம்பரம் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Close